பொது செய்தி

தமிழ்நாடு

'பொள்ளாச்சி பாலியல் வழக்கில்  துல்லிய விசாரணை தேவை '

Added : ஜன 08, 2021
Share
Advertisement
கோவை:''பொள்ளாச்சி பாலியல் வழக்கில், அரசியல் பின்புலம் குறித்து துல்லியமான விசாரணை நடத்தப்பட வேண்டும்,'' என, மாதர் சங்க தலைவர் கூறினார்.அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில தலைவர் வாலன்டினா, கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:பொள்ளாச்சி பாலியல் வழக்கில், இதுவரை எட்டு பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். பல அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு உள்ளது. எனவே, அரசியல்

கோவை:''பொள்ளாச்சி பாலியல் வழக்கில், அரசியல் பின்புலம் குறித்து துல்லியமான விசாரணை நடத்தப்பட வேண்டும்,'' என, மாதர் சங்க தலைவர் கூறினார்.

அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில தலைவர் வாலன்டினா, கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:பொள்ளாச்சி பாலியல் வழக்கில், இதுவரை எட்டு பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். பல அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு உள்ளது. எனவே, அரசியல் பின்புலம் குறித்து துல்லியமாக, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

200 பெண்கள் பாதிக்கப்பட்டதாக காவல்துறை முதலில் கூறியது. அது பற்றி முழுமையாக விசாரிக்கப்படவில்லை.கடந்த ஐந்து ஆண்டுகளில், இளம்பெண்கள் மாயமானது, கடத்தல், தற்கொலை உள்ளிட்ட விபரங்களை சேகரித்து விசாரித்தால், பல உண்மைகள் வெளிவரும். சி.பி.ஐ, விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்.

ஆரம்ப கட்டத்தில், குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில், வழக்கு விசாரணையில் மெத்தனம் காட்டிய போலீஸ் அதிகாரிகளையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும். பொள்ளாச்சியில், வரும் 10ம் தேதி மாதர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம். இதில் தி.மு.க., எம்.பி., கனிமொழி பங்கேற்க உள்ளார். இவ்வாறு, வாலன்டினா கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X