திருப்பூர்:''பவானி ஆற்றின் குறுக்கே, 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஏழு புதிய தடுப்பணைகள் அமைக்கப்படும்,'' என, முதல்வர் பழனிசாமி., அறிவித்துள்ளார்.
ஊத்துக்குளி ஒன்றியம், நடுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது, சின்ன சாணார்பாளையம். இங்கு, மரம் ஏறும் தொழிலாளர் குடும்பங்கள் அதிகம் வசிக்கின்றன. முதல்வர் பழனிசாமி, நேற்று தெற்கு சாணார்பாளையத்தில், மரம் ஏறும் தொழிலாளர் குடும்பத்தினருடன் பேசினார்.
முன்னதாக, வெல்லம் காய்ச்சும் தொழிலாளி வீட்டுக்கு சென்ற முதல்வர் பழனிசாமி, கருப்பட்டி காய்ச்சும் கூடத்தை பார்வையிட்டார். அதன்பின், தொழிலாளர் ஒருவர் வழங்கிய, பதநீரை, பனை ஓலை குடுவையில் வாங்கி அருந்தினார். அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன் உள்ளிட்டோரும், பதநீர் அருந்தினர்.
அதன்பின், முதல்வர் பேசியதாவது:அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் பெற ஏதுவாக, ஏழு தடுப்பணைகள் கட்டப்பட உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து, பவானி வரை, 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பவானி ஆற்றின் குறுக்கே, ஏழு இடங்களில் தடுப்பணை அமைக்கப்படும். அடிக்கடி விபத்து நடப்பதை தவிர்க்க, பல்லகவுண்டம்பாளையம் அருகே, 28 கோடி ரூபாயில், புதிய மேம்பாலம் கட்டப்படுகிறது.இவ்வாறு, முதல்வர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE