சென்னை:'வன்னியர் குல சத்திரிய சமுதாயத்தை விமர்சனம் செய்த, தி.மு.க., நிர்வாகி மீது, தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வன்னியர் குல சத்திரியர்கள் கூட்டு இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
கூட்டு இயக்கத் தலைவர் நாகரத்தினம், பொதுச் செயலர் சி.ஆர்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை: பெரம்பலுார் மாவட்டம், ஆலத்துார் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலர் கிருஷ்ணமூர்த்தி, ஒரு கூட்டத்தில், வன்னிய குல சத்திரிய சமூகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசி உள்ளார்.
'வன்னியர்களுக்கு, 20 சதவீதம் தனி ஒதுக்கீடு, கருணாநிதி முதல்வரானதால் தான் கிடைத்தது. வேறு யார் முதல்வராக வந்திருந்தாலும் கிடைத்திருக்காது.'வன்னியர் சமுதாயம், விழிப்புணர்வு இல்லாத சமுதாயம்' என, கடுமையாக விமர்சனம்செய்துள்ளார்; இதை கண்டிக்கிறோம்.வன்னியர்கள் அனைவரும் கூட்டாக இணைந்து, போராடி இட ஒதுக்கீடு பெற்றோம்.
இது, நீண்ட வரலாறு. சிலர் உண்மை தெரியாமல், பிதற்றி வருகின்றனர்.'நுணலும் தன் வாயால் கெடும்' என்பது, தி.மு.க.,வுக்கு பொருந்தும். அதேபோலத் தான், இப்போது ஒரு வறட்டு தவளை கத்தி உள்ளது. தி.மு.க., தலைமை இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்; கிருஷ்ணமூர்த்தி மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE