கோவை:மாவு அரவை மற்றும் விற்பனையகங்களில், ரேஷன்அரிசி பதுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் வழங்கப்படும் இலவச அரிசி, கேரள மாநிலத்தில் பட்டை தீட்டப்பட்டு, அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. லாரிகள், ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்களில் கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது.மாவட்ட வழங்கல் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'கேரள செல்லும் அனைத்து வழிகளிலும் கண்காணிப்புக்கு அலுவலர்கள் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். இட்லி, தோசை மாவு அரைத்து விற்பனை செய்யும் கடைகளுக்கு, ரேஷன் அரிசி விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுவரை, 6 மாவு அரவை விற்பனையகங்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு கடை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE