பொது செய்தி

தமிழ்நாடு

புதிய தேர்தல் அடையாள அட்டை பிப்.,ல் வினியோகம் : கோவை கலெக்டர் தகவல்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
கோவை:புதிதாக விண்ணப்பித்தவர்கள், திருத்தம் மேற்கொண்டவர்களுக்கு பிப்., மாதம், தேர்தல் அடையாள அட்டை வழங்கப்படும் என, கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்., மே மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகின்றன.கோவை மாவட்டத்தில், 10 சட்டமன்ற தொகுதிகளில், வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில், 29 லட்சத்து 97

கோவை:புதிதாக விண்ணப்பித்தவர்கள், திருத்தம் மேற்கொண்டவர்களுக்கு பிப்., மாதம், தேர்தல் அடையாள அட்டை வழங்கப்படும் என, கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்., மே மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகின்றன.கோவை மாவட்டத்தில், 10 சட்டமன்ற தொகுதிகளில், வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில், 29 லட்சத்து 97 ஆயிரத்து 733 பேர் இடம் பெற்று இருந்தனர்.தொடர்ந்து கடந்த, 15ம் தேதி வரை, பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சிறப்பு முகாம்களின் இறுதியில், 1, 70, 419 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்து இருந்தனர்.இந்நிலையில், சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் முழுமையாக ஆய்வு செய்து அப்டேட் செய்யும் பணிகள் முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.வரும், 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது; அதற்கான ஆயத்த பணிகள் கோவையில் துவக்கப்பட்டுள்ளன.கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:தற்போது, இறுதிவாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. விண்ணப்பங்கள் அனைத்தும் ஆய்வு செய்யும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 18 வயது நிறைவு பெற்றவர்கள் பெயர் சேர்க்க, பிறர் திருத்தம், நீக்கல் தொடர்பாக தொடர்ந்து, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம்.இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பி, இவ்விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும். ஆன்லைன் விண்ணப்பிக்க இயலாதவர்களும், 20ம் தேதிக்கு பின், சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் நேரடியாக கொடுக்கலாம்.தற்போது, விண்ணப்பித்தவர்களுக்கான புதிய தேர்தல் அடையாள அட்டை, பிப்., மாதம் வினியோகிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X