சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குளக்கரை ஆக்கிரமிப்பு 140 வீடுகள் தரைமட்டம்

Added : ஜன 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை:கோவை, செல்வம்பதி - கிருஷ்ணாம்பதி குளங்கள் சந்திக்கும் இடத்தில், கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, 140 ஆக்கிரமிப்பு வீடுகள் நேற்று இடித்து அகற்றப்பட்டன.நீர் நிலைகளை ஆக்கிரமித்து வசிப்போருக்கு, மாற்று இடம் வழங்கி விட்டு, கட்டடங்களை அகற்ற, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவையில் உள்ள குளங்கள் மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு

கோவை:கோவை, செல்வம்பதி - கிருஷ்ணாம்பதி குளங்கள் சந்திக்கும் இடத்தில், கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, 140 ஆக்கிரமிப்பு வீடுகள் நேற்று இடித்து அகற்றப்பட்டன.நீர் நிலைகளை ஆக்கிரமித்து வசிப்போருக்கு, மாற்று இடம் வழங்கி விட்டு, கட்டடங்களை அகற்ற, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவையில் உள்ள குளங்கள் மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்கள், படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றன.முத்தண்ணன் குளத்துக்கு அருகில் ஓம் சக்தி நகரில் காலி செய்யப்பட்ட வீடுகள், செல்வம்பதி, கிருஷ்ணாம்பதி குளங்கள் சந்திக்கும் பகுதியில், கரையை ஆக்கிரமித்து, 400க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அங்கு வசித்தவர்களுக்கு, குடிசை மாற்று வாரியம் மூலம் மாற்று வீடு வழங்கப்பட்டது.மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் உத்தரவை தொடர்ந்து, நிர்வாக பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா ஆகியோர் தலைமையில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட, 200வீடுகள் இடிக்கும் பணி நேற்று துவங்கியது; 140 வீடுகள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டன. மீதமுள்ள வீடுகள் இன்று இடிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
08-ஜன-202111:55:19 IST Report Abuse
JeevaKiran ஆக்ரமிப்பு செய்யும்போதே அகற்றினால், இத்தனை செலவும் மிச்சமாகுமே? இதனை ஏன் நீதிமன்றமும் கண்டுகொள்வதில்லை? ஆக்ரமிப்பு செய்தவர்களுக்கு ஏன் மாற்று இடம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X