தமிழகத்தில் சினிமா தியேட்டர்களில், 100 சதவீதம் பார்வையாளர்களைஅனுமதிக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் நோய் தொற்று பரவ அதிகம் வாய்ப்பு இருப்பதாக, பெரும்பாலான மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.'விபரீத விளைவு ஏற்படும்'விலை மதிப்பற்ற பல லட்சம் உயிர்களை இழந்து இருக்கிறோம். சினிமா தியேட்டர்களை முழுமையாக திறந்தால், நோய் தொற்று அதிகரிக்கும். லேசான நோய் பாதிப்பு உள்ளவரின், மூச்சு காற்று பட்டாலே நோய் தொற்று வரும். மூன்று மணி நேரம், பெரிய அறையில் ஆயிரக்கணக்கானவர்களை அடைத்து வைத்தால், கண்டிப்பாக விபரீத விளைவு ஏற்படும்.- - டாக்டர் அரவிந்தன்காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவ நிபுணர், சர்வம் மருத்துவமனை.'சினிமா தேவை இல்லை'மிகவும் சிரமப்பட்டு நோய் தொற்றை குறைத்து வருகிறோம். இந்த நேரத்தில் சினிமா தேவையில்லை. தடுப்பு மருந்து போட்டு நல்ல ரிசல்ட் கிடைத்த பிறகு, சினிமா தியேட்டர்களை திறக்கலாம். மூடிய அறைக்குள் மூன்று மணி நேரம், மக்கள் இருந்தால் கண்டிப்பாக நோய் பரவும். சினிமா அவ்வளவு அத்தியாவசியமானது இல்லை. பொதுமக்களின் உயிர்தான் முக்கியம். 100 சதவீத அனுமதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.-டாக்டர் சூரஜ்குமார்சிறுநீரக சிறப்பு மருத்துவ நிபுணர், சி.எஸ்.ஆர்., மருத்துவமனை'100 சதவீதம் என்றால் கஷ்டம்'என் கருத்துப்படி, இப்போது, 50 சதவீதம் பேருக்கு நோய் தொற்று இருக்கும். அது அவர்களுக்கு தெரியாது. அறிகுறிகள் வந்து போய் இருக்கலாம். 50 சதவீதம் பேரை தியேட்டரில் அனுமதித்தால் தொற்று வர வாய்ப்பு உள்ளது. 100 சதவீதம் என்றால் கஷ்டம்தான். யாரும் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்க மாட்டார்கள்.-டாக்டர் ராம்குமார் பொது மருத்துவர், ஸ்ரீவசுமதி மருத்துவமனை.'நுாறு சதவீதம் தொற்றும்'சினிமா தியேட்டர்களில் கட்டுப்பாடு இல்லாமல், பார்வையாளர்களை அனுமதித்தால், 100 சதவீதம் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. இப்போதுதான் தொற்று குறைந்து வருகிறது. இந்த நிலையில் சினிமா அவசியமில்லை. இதை இன்னும் சிறிது காலம் வரை தவிர்ப்பது நல்லது.- டாக்டர் வருண் சந்தரமூர்த்திநோய் தொற்று பிரிவு சிறப்பு மருத்துவ நிபுணர், கே.எம்.சி.ஹெச்.'ஏசியால் ரிஸ்க் அதிகம்'மாஸ்க் சரியாக அணிந்து கொண்டு, போதிய இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டால் பிரச்னை இல்லை. ஆனால் அதை பின்பற்றுவோர் குறைவு. உடல் நிலை சரி இல்லாதவர்கள், சினிமாவுக்கு போக மாட்டார்கள். இளைஞர்கள்தான் அதிகம் போக வாய்ப்பு உள்ளது. பாதுகாப்புடன் போக வேண்டும். மூடப்பட்ட 'ஏசி' அறை என்பதால் ரிஸ்க் அதிகம்.- டாக்டர் மகேஷ்வரன் நுரையீரல் சிறப்பு மருத்துவ நிபுணர். கே.ஜி., மருத்துவமனை'தவிர்ப்பது நல்லது!'ஐசிஎம்ஆர் நிபுணர் கமிட்டி தென் மண்டல ஆலோசகர் டாக்டர் பிரதீப் கவுர், 100 சதவீதம் அடைத்து இருக்கும் இடங்களில், சமூக இடைவெளி இல்லாமல், அமர்ந்து இருந்தால் கொரோனா நோய் தொற்றும் வாய்ப்பு அதிகம் என கூறி இருக்கிறார். அதனால், 100 சதவீத சீட் விவகாரத்தை, தவிர்ப்பது நல்லது.--டாக்டர் சவுந்தரவேல்சிறப்பு மருத்துவ நிபுணர், ராஜம் மருத்துவமனை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE