சென்னை:'புதிய கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:புதிய கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அனைவரும் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் திரையரங்குகளில் ௧௦௦ சதவீதம் பார்வையாளர்களை அனுமதிப்பது கொரோனா வைரஸ் பரவலை வேகப்படுத்தும். இது சரியான நடவடிக்கை அல்ல. திரையரங்குகளில் ௫௦ சதவீதத்திற்கும் மேல் பார்வையாளர்களை அனுமதிக்கக் கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அதை ஏற்று திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்கும் முடிவை கைவிட வேண்டும்.
மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. எனவே புதிய கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும்.சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் கைகளை நன்றாகக் கழுவுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து புதிய கொரோனா பரவலை தடுக்க துணை நிற்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE