கோவை:கோவை மாநகராட்சி வரி வசூலர் மற்றும் அவரது உதவியாளரை, லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று கைது செய்ததை கேள்விப்பட்ட, சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நடவடிக்கை தொடர வேண்டுமென, நேர்மையான ஊழியர்கள் விரும்புகின்றனர்.கோவை மாநகராட்சியில், பொதுப்பிரிவு, கணக்கு, சுகாதாரம், பொறியியல், வருவாய், நகரமைப்பு, கல்வி, தணிக்கை என, பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. இதில், வரி வசூலிக்கும் பிரிவு மற்றும் நகரமைப்பு பிரிவுகளில் முறைகேடு அதிகமாக நடக்கிறது.இந்நிலையில், தெற்கு மண்டலம், சுந்தராபுரம் வார்டு அலுவலகத்தில், வரி புத்தகம் போட்டுக் கொடுக்க, ரூ.18 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கவுஸ் மொய்தீன், அவரது உதவியாளர் தனபாலன் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.இத்தகவலறிந்ததும், மாநகராட்சி ஊழியர்கள் பீதியடைந்தனர். சில உயரதிகாரிகளுக்கு, ரகசியமாக லஞ்சம் வாங்கிக்கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும், அலுவலக உதவியாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அதேநேரம், இந்நடவடிக்கையை லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர வேண்டுமென, நேர்மையான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE