பொது செய்தி

தமிழ்நாடு

சாய்பாபா 78வது ஆண்டு சிறப்பு தரிசன தின விழா

Added : ஜன 08, 2021
Share
Advertisement
கோவை:கோவை மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள சாய்பாபாகோவிலில் (நாகசாயி மந்திரில்), 78வது ஆண்டு தரிசன தின விழா நடந்தது.சாய்பாபாவிற்கு தங்கத்தாலான சேஷவாகன அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நாகசாயி மற்றும் விநாயகர் உற்சவராக எழுந்தருளுவிக்கப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.காலை 5:15க்கு காகடஹாரத்தியுடன் நிகழ்ச்சி துவங்கியது, மகாகணபதிஹோமம், பூர்ணாஹுதியும், காலை 11:10

கோவை:கோவை மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள சாய்பாபாகோவிலில் (நாகசாயி மந்திரில்), 78வது ஆண்டு தரிசன தின விழா நடந்தது.சாய்பாபாவிற்கு தங்கத்தாலான சேஷவாகன அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நாகசாயி மற்றும் விநாயகர் உற்சவராக எழுந்தருளுவிக்கப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.காலை 5:15க்கு காகடஹாரத்தியுடன் நிகழ்ச்சி துவங்கியது, மகாகணபதிஹோமம், பூர்ணாஹுதியும், காலை 11:10 மணிக்கு நாகசாயி பஜன், தொடர்ந்து மகாஅபிஷேகமும், பகல் 1:00 மணிக்கு பிரசாத வினியோகமும் நடந்தது.மாலை 6:45 மணிக்கு நாகசாயி பஜன், இரவு 8:30 மணிக்கு சேஷஹாரத்தியோடு நிறைவடைந்தது. பக்தர்கள் சிறப்பு சேவா தரிசனத்துக்கு, சமூக இடைவெளிவிட்டு அனுமதிக்கப்பட்டனர்.இந்நிகழ்வு சமூகவளைத்தளங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. திரளான பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், முகக்கவசம் அணிந்தும், பாபாவை தரிசித்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X