திருப்பூர்:அப்துல் கலாம் நினைவாக, அரசு பள்ளி மாணவர்கள் மூலமாக, 100 சிறிய செயற்கைகோள்களை விண்ணவில் ஏவ அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.வரும் பிப்., 7ம் தேதி ராமேஸ்வரத்தில், ராணுவ அமைச்சகத்தின் அனுமதியோடு இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், அரசுப்பள்ளி மாணவர்களை முழுமையாக ஈடுபடுத்தும் வகையில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் பட்டியல், மாவட்ட வாரியாக திரட்டப்படுகிறது.இவர்களுக்கு, ஆறு நாட்கள் ஆன்லைன் மூலமாக செயற்கைக்கோள் வடிவமைப்பது சார்ந்த பயிற்சியும், ஒரு நாள் நேரடி பயிற்சியும் அளிக்கப்படும். இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு, 96006 64744 எண்ணில் தொடர்பு கொள்ள கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் ஈடுபட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE