அவிநாசி:சிப்காட்' விவகாரம் தொடர்பாக, முதல்வரின் அடுத்தடுத்த அறிவிப்பு, விவசாயிகள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தியிருக்கிறது.தத்தனுார் கிராமத்தில், 'சிப்காட்' தொழில்கூடம் அமைக்க ஆரம்ப கட்டத்திலேயே விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் முதல்வரின் கவனத்துக்கு செல்ல, அவர் கொங்கு மண்டல பகுதியில் எந்த இடத்தில் தேர்தல் பிரசாரம் செய்தாலும், 'தத்தனுாரில், சிப்காட் தொழில் கூடம் வராது' என, திட்டவட்டமாக கூறி வருகிறார்.ஈரோடு மாவட்டம் நம்பியூரில் நடந்த பிரசார கூட்டத்தில், இந்த உறுதிமொழியை மீண்டும் முதல்வர் அளித்தார். இது, தத்தனுார், புஞ்சை தாமரைக்குளம், புலிப்பார் ஊராட்சி விவசாயிகள் மத்தியில் ஆறுதலையும், அரசின் மீது நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.இருப்பினும், 'சிப்காட்' ரத்து குறித்து அரசாணை வெளியிட வேண்டுமென, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE