பொது செய்தி

தமிழ்நாடு

இன்று தடுப்பூசி ஒத்திகை

Added : ஜன 08, 2021
Share
Advertisement
திருப்பூர்;மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, கொரோனா தடுப்பூசி ஒத்திகை, மாவட்டம் வாரியாக நடந்து வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, உடுமலை அரசு மருத்துவக்கல்லுாரி, பொங்கலுார் ஆரம்ப சுகாதார நிலையம், டி.எஸ்.கே., மாநகராட்சி மருத்துவமனை, சரண் மருத்துவமனை ஆகிய, ஐந்து மையங்களில், தடுப்பூசி ஒத்திகை நடக்கிறது.டி.எஸ்.கே., மருத்துவமனையில்,

திருப்பூர்;மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, கொரோனா தடுப்பூசி ஒத்திகை, மாவட்டம் வாரியாக நடந்து வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, உடுமலை அரசு மருத்துவக்கல்லுாரி, பொங்கலுார் ஆரம்ப சுகாதார நிலையம், டி.எஸ்.கே., மாநகராட்சி மருத்துவமனை, சரண் மருத்துவமனை ஆகிய, ஐந்து மையங்களில், தடுப்பூசி ஒத்திகை நடக்கிறது.டி.எஸ்.கே., மருத்துவமனையில், கலெக்டர் விஜயகார்த்திகேயன், நேற்று நேரில் சென்று முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார்.இதுகுறித்து, கலெக்டர் கூறியதாவது:அரசு வழிகாட்டுதலின்படி, கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாளை (இன்று) நடக்கிறது. ஒவ்வொரு மையத்திலும், தலா, 100 பேர் வரை தடுப்பூசி ஒத்திகை நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்; அதற்காக, தலா, 25 பேர் அடங்கிய குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன.சரிபார்ப்பு பணி, தகவல் பதிவு, பரிசோதனை, தடுப்பூசி, கண்காணிப்பு என, ஐந்து பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டு கொள்ளும் நபர்கள், அடுத்த அரை மணி நேரத்துக்கு, மருத்துவ குழுவின் கண்காணிப்பில் வைக்கப்படுவர்.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X