திருப்பூர் லட்சுமி நகர் மெயின் ரோடு, தேவாங்கபுரத்தில், டிரான்ஸ்பார்மர் அருகில், செடிகள் வளர்ந்துள்ளன. குப்பை கொட்டப்பட்டு, தேங்கி கிடக்கிறது. செடிகளையும், குப்பையையும் அகற்றி, சுத்தம் செய்யவேணடும்.- ராமசாமி,லட்சுமிநகர்.குடிநீர் தட்டுப்பாடுதிருப்பூர் மாநகராட்சி 23வது வார்டு, பண்டிட் நகர் பகுதி வீடுகளுக்கு, பத்து நாட்களுக்கு ஒருமுறை, ஒரு மணி நேரம் மட்டும் குடிநீர் வினியோகிக்கின்றனர். போதிய அளவு குடிநீர் கிடைப்பது இல்லை.- பாலசுப்பிரமணியம், பண்டிட் நகர்.ரோடு மோசம்திருப்பூர், நேருவீதியில், ரோடு, குண்டும் குழியுமாக உள்ளது. வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது; டவுன்ஹால் பகுதியில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ரோட்டை சரி செய்யவேண்டும்.- மாணிக்கம்,திருப்பூர்.போலீசாரின் கவனத்துக்கு...திருப்பூர், ஈஸ்வரன் கோவில் வீதி, ஹார்வி ரோடு, பார்க் ரோடு பின்புறம் ஆகிய பகுதியில் மறைந்திருக்கும் மர்ம நபர்கள் அவ்வழியாக செல்வோரை தாக்கி நகை, பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.- சிதம்பரசாமி, திருப்பூர்.பல்லாங்குழி சாலை1. திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் ரவுண்டானாவில் இருந்து சடையப்பன் கோவில் செல்லும் யூனியன் மில்ரோடு குண்டும் குழியுமாக, போக்குவரத்து லாயக்கற்றதாக உள்ளது. இதானால், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.- மோகனசுந்தரம், கே.பி.என்., காலனி.2. திருப்பூர், குமார்நகரில் இருந்து வலையங்காடு செல்லும் ரோட்டில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிக்காக குழி தோண்டப்பட்டது. பணி முடிந்த பின், முறையாக சீரமைக்காததால் கரடுமுரடாகி விட்டது.- அருண்பிரகாஷ், குமார்நகர்.மதுக்கடையால் இடையூறுதிருப்பூர், பல்லடம் ரோடு - வெட்டுப்பட்டான்குட்டையில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடையால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.- ராமசந்திரன், தெற்குபாளையம் பிரிவு
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE