திருப்பூர்;நகர்ப்புறங்களில் நடத்தப்படுவது போன்று கிராமங்களிலும் பாதிக்கப்பட்டோர் பயன் பெற இலவச இருதய சிகிச்சை முகாம் நடத்த 'காமன் இந்தியன்' கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.இந்த அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, கொரோனா காலத்தில் பணியாற்றியவருக்கு பாராட்டு விழா திருப்பூரில்நடந்தது. கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை 'டீன்' நிர்மலா, கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பல துறைகளை சார்ந்தவர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்.கடந்த நான்கு ஆண்டுகளில் அமைப்பு சார்பில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்ட பணி, இருதய அறுவை சிகிச்சை முகாம், இயலாதவருக்கு செய்த உதவி குறித்து வீடியோ வெளியிடப்பட்டது. முன்னாள் நிர்வாகிகள் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்தனர்.அதில், வெங்கடேஷ் தலைவராகவும், முகமது ஹவுஸ் செயலாளராகவும், துணைத்தலைவராக ஜனாதிபதிராஜராஜன், பொருளாளராக செல்வக்குமார், இணை செயலாளராக பிரணவ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.செயலாளர் பேசுகையில்,' காமன் இண்டியன்ஸ் அமைப்புக்கென தனி அலுவலகம் அமைக்கப்படும்; பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படிக்கும் மாணவர், போட்டி தேர்வுக்கு தயாராகிறவர் வசதிக்காக நுாலக வசதி ஏற்படுத்தப்படும்.நகர்ப்புறங்களில் நடத்தப்படுவது போன்று கிராமங்களிலும் பாதிக்கப்பட்டோர் பயன்பெற மூன்று மாதத்துக்கு ஒருமுறை இலவச இருதய சிகிச்சை முகாம் நடத்தப்படும்,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE