திருப்பூர்;கொரோனா ஊரடங்கு காலத்தில், தனித்திறனை வெளிப்படுத்தி, சிறந்த படைப்புகளை உருவாக்கிய நிப்ட்-டீ கல்லுாரி மாணவர்களுக்கு, நேற்று விருது வழங்கப்பட்டது.கொரோனா பரவலை தடுப்பதற்காக, கடந்த மார்ச் மாதம் முதல், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. ஊரடங்கு காலத்திலும், திருப்பூர் முதலிபாளையம், 'நிப்ட்-டீ' ஆடை வடிவமைப்பு கல்லுாரி மாணவர்கள், ஏராளமான கலை நயம்மிக்க படைப்புகளை உருவாக்கினர்.சனா டெவலப்பர்ஸ் நிறுவனம் மற்றும் ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் இணைந்து, கொரோனா காலத்தில் சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவர்களை தேர்வு செய்துள்ளது. அந்த மாணவர்களுக்கு, 'நிப்ட்-டீ' கல்லுாரியில் நேற்று நடந்த விழாவில், விருது வழங்கப்பட்டது.சிறப்பான ஓவியம் தீட்டிய, சஞ்சய்குமார், ஸ்வேதா, நிவேதா, பரமசிவம், வசந்த் ஆகியோருக்கு, ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம், 'நிப்ட்-டீ' கல்லுாரி தலைவர் மோகன், முன்னாள் தலைவர் முருகானந்தன் விருது வழங்கி பாராட்டினர். கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன், முதன்மை டிசைனர் பூபதி விஜய் உட்பட பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE