பந்தலுார்:'நீலகிரியில் தொடரும், யானை- மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே, மழவன் சேரம்பாடியில் யானை தாக்கி உயிரிழந்த கவுன்சிலர் ஆனந்தராஜ்; அவரது மகன் பிரசாந்த்; கண்ணம்வயலை சேர்ந்த நாகமுத்து ஆகியோரின் உருவப்படங்களை, நீலகிரி தொகுதி எம்.பி.., ராஜா திறந்து வைத்தார்.இறந்தவர்களின் குடும்பத்துக்கு, தலா, 50- ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கி, அவர் பேசுகையில், 'யானை-மனித மோதலை தடுக்க, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் திட்டம் அறிவிக்கப்படும். யானைகளால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., திராவிடமணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முபாரக், ஒன்றிய செயலாளர் சிவானந்தராஜா, முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE