ஊட்டி:வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பாக, இரண்டாம் கட்ட ஆய்வு கூட்டம் நடந்தது.நீலகிரியில், திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல், நவ., 16ம் தேதி வெளியிடப்பட்டது. இங்குள்ள மூன்று தொகுதிகளில், 885 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான பணிகள் குறித்த, இரண்டாம் கட்ட ஆய்வு கூட்டம் நடந்தது.நீலகிரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கருணாகரன் தலைமை வகித்தார். மாவட்ட தேர்தல் அதிகாரி இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், தேர்தல் பார்வையாளர் கருணாகரன் பேசுகையில்,''தகுதி வாய்ந்த எந்த ஒரு வாக்காளரும், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்ய கூடாது. தகுதியில்லாத வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற கூடாது. இதை முறையாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.''பெயர் நீக்கம் செய்வதற்கு முன், சம்மந்தப்பட்ட நபர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன்பின், பெயர் நீக்கம் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அலுவலர்கள் முழு ஒத்துழைப்போடு செம்மையாக வெளியிட வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE