30 சதவீத காலிப்பணியிடங்கள்: மின் பணிகள் பாதிப்பு; வேலைப்பளுவால் திணறல்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
ஆனைமலை;அங்கலக்குறிச்சி மின்வாரிய உட்கோட்டத்தில், காலிப்பணியிடங்களால் பணியாளர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.ஆனைமலை சுற்றுப்பகுதிகளில் பெரும்பாலான மின் கம்பங்கள், விளைநிலங்களை ஒட்டியுள்ள ரோடுகள் வழியாக, கொண்டு செல்லப்படுகிறது.இந்நிலையில், ஆனைமலை, கோட்டூர் சுற்றுப்பகுதிகளில், அதிவேக காற்றுடன் பருவமழை பெய்வதால், அடிக்கடி மின்கம்பிகளில் மட்டைகள்

ஆனைமலை;அங்கலக்குறிச்சி மின்வாரிய உட்கோட்டத்தில், காலிப்பணியிடங்களால் பணியாளர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.ஆனைமலை சுற்றுப்பகுதிகளில் பெரும்பாலான மின் கம்பங்கள், விளைநிலங்களை ஒட்டியுள்ள ரோடுகள் வழியாக, கொண்டு செல்லப்படுகிறது.இந்நிலையில், ஆனைமலை, கோட்டூர் சுற்றுப்பகுதிகளில், அதிவேக காற்றுடன் பருவமழை பெய்வதால், அடிக்கடி மின்கம்பிகளில் மட்டைகள் விழுந்தும், மரங்கள் சாய்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.இந்நிலையில், அங்கலக்குறிச்சி மின்வாரிய உட்கோட்டத்தில் அதிக அளவில், லைன் மேன், உதவியாளர், லைன் இன்ஸ்பெக்டர் உள்பட பல பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மின்பாதையில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை, உடனடியாக தீர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது.ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, ஆனைமலை ஒன்றியம் முழுவதிலும், பல மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை ஏற்படுகிறது.அதிலும், இரவு நேரங்களில் பிரச்னை ஏற்பட்டால், சீரமைப்பு பணி மிகவும் தாமதமாகிறது.மின்தடை நாளில் அறிவிக்கப்பட்ட நேரத்தை விட, கூடுதலாக பல மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது.அடிக்கடி ஏற்படும் மின் தடையால், தொழில் நிறுவனங்கள், 'ஆன்லைன்' கல்வி பயிலும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கின்றனர்.ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு, குடிநீர் வழங்க முடியாத நிலையும் ஏற்படுகிறது.மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:அங்கலக்குறிச்சி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், 30 சதவீதத்துக்கும் அதிகமான, லைன் மேன், உதவியாளர்,லைன் இன்ஸ்பெக்டர்உள்ளிட்ட களப்பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.இதனால், பணிச்சுமை அதிகரித்து, பணியாளர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இருவர் செய்யும் வேலையை, ஒருவரே செய்யும் நிலை ஏற்படுகிறது.இதனால், பிரச்னைகளை தீர்க்க தாமதம் ஏற்பட்டு, மின் வினியோகம் தடைபடுகிறது. அரசு விரைவில் காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X