பொது செய்தி

தமிழ்நாடு

மனநலம் பாதித்தவர் மீட்பு: அறக்கட்டளை உதவிக்கரம்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை, அங்கலக்குறிச்சி ஜே.ஜே., நகர் அருகில், பல நாட்களாக மன நலம் பாதித்த இளைஞர் ஒருவர் சுற்றித்திருந்து வந்தார். அடிக்கடி ரோட்டில் ஓடுவது, ரோட்டோரம் அமருவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்ததால், வாகன ஓட்டுனர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.இது குறித்து தகவலறிந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 'தாய்மை' அறக்கட்டளையினர், நேற்று முன்தினம் அங்கலக்குறிச்சி வந்தனர்.
 மனநலம் பாதித்தவர் மீட்பு: அறக்கட்டளை உதவிக்கரம்

ஆனைமலை:ஆனைமலை, அங்கலக்குறிச்சி ஜே.ஜே., நகர் அருகில், பல நாட்களாக மன நலம் பாதித்த இளைஞர் ஒருவர் சுற்றித்திருந்து வந்தார். அடிக்கடி ரோட்டில் ஓடுவது, ரோட்டோரம் அமருவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்ததால், வாகன ஓட்டுனர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.இது குறித்து தகவலறிந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 'தாய்மை' அறக்கட்டளையினர், நேற்று முன்தினம் அங்கலக்குறிச்சி வந்தனர். அறக்கட்டளையின் தலைவர் மணிமேகலை, பொருளாளர் புவனேஸ்குமார் தலைமையிலான உறுப்பினர்கள், அந்த இளைஞரை மீட்டனர். மனநலம் பாதித்தவர்களை பாதுகாக்கும், புதுக்கோட்டை 'ரினீவல்' அறக்கட்டளையில் சேர்த்தனர்.'தாய்மை' அறக்கட்டளையின் தலைவர் கூறுகையில், 'மீட்கப்பட்ட இளைஞருக்கு, 25 வயதிருக்கும், அவரின் ஊர், பெற்றோர் என எந்தத்தகவலும் தெரியவில்லை. அவரை பத்திரமாக மீட்டுள்ளோம். இதுவரை, மனநலம் பாதித்தவர்கள், 130 பேரை மீட்டுள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X