பொது செய்தி

தமிழ்நாடு

தக்காளி, வெங்காயத்துக்கு பயிர் காப்பீடு

Added : ஜன 08, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்;பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில், இணைந்து பயன் பெற தோட்டக்கலைத்துறையினர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திவ்யா அறிக்கை:நடப்பாண்டு சாகுபடி செய்துள்ள தக்காளி, வெங்காய பயிர்களுக்கான பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது. இயற்கை இடர்பாடுகளால்

மடத்துக்குளம்;பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில், இணைந்து பயன் பெற தோட்டக்கலைத்துறையினர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திவ்யா அறிக்கை:நடப்பாண்டு சாகுபடி செய்துள்ள தக்காளி, வெங்காய பயிர்களுக்கான பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது. இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும், விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவது, நிலையான வருவாய் கிடைக்க வழி செய்வது, நவீன வேளாண்-மை தொழில்நுட்பங்களை பின்பற்ற செய்து, விவசாயிகளை ஊக்குவிப்பது, உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயத்தில் இருந்து பாதுகாப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.பயிர் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் தங்களது, விருப்பத்தின் பேரில் இணைந்து பயன் பெறலாம். தக்காளி ஒரு ஏக்கருக்கு பிரீமியம், 1,417 ரூபாய் செலுத்தினால், இழப்பீடாக, 28,350 ரூபாய் பெறலாம், வெங்காயம் ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக, 2,112 ரூபாய் செலுத்தினால், 42,250 ரூபாய் பெறலாம்.சிட்டா அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, போட்டோ ஆகியவற்றுடன், பொது இ--சேவை மையத்தில் பிரீமியம் செலுத்தி பயிருக்கு, காப்பீடு பெறலாம்.வெங்காயத்துக்கு பிப்.,15, தக்காளிக்கு மார்ச் 1ம் தேதி காப்பீடு செய்ய கடைசி நாளாகும். மேலும், விபரங்களுக்கு, 9659838787, மற்றும் 7538877132 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு, அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X