பொது செய்தி

தமிழ்நாடு

திட்ட தொழில்சார் வல்லுனர் வேலை: கலெக்டர் அழைப்பு

Added : ஜன 08, 2021
Share
Advertisement
உடுமலை:ஊரக புத்தாக்க திட்டத்தில், தொழில்சார் வல்லுனர், வேலைவாய்ப்பு வழங்க, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில், 122 தொழில்சார் வல்லுனர்கள் நியமிக்கப்பட உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, குண்டடம், அவிநாசி, திருப்பூர் மற்றும் பொங்கலுார் வட்டாரங்களில் ஊரக புத்தாக்க திட்டம்

உடுமலை:ஊரக புத்தாக்க திட்டத்தில், தொழில்சார் வல்லுனர், வேலைவாய்ப்பு வழங்க, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில், 122 தொழில்சார் வல்லுனர்கள் நியமிக்கப்பட உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, குண்டடம், அவிநாசி, திருப்பூர் மற்றும் பொங்கலுார் வட்டாரங்களில் ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த வட்டாரங்களில் மொத்தமாக, ஒரு ஊராட்சிக்கு ஒருவர் வீதம், தொழில்சார் வல்லுனர்கள் தேர்வு செய்யப்படஉள்ளனர்.இந்த பணிக்குகுறைந்தபட்சம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 20 வயது முதல், 45 வயதுக்குள்ளும், 'ஆண்ட்ராய்ட்' மொபைல் பயன்படுத்த அறிந்தவர்களாகவும், சுயஉதவிக்குழு உறுப்பினராகவும் இருக்க வேண்டும். மக்கள் அமைப்புகளின் நிர்வாகியாகவோ, பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு இல்லை.தொழில் முனைபவர்களாக, தொழில் முனைபவர்களின் குடும்பத்தினராகவும் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தொழில் அனுபவம் இருக்க வேண்டும். இத்தகைய தகுதியுள்ள நபர்கள், வரும், 12ம் தேதிக்குள் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு வழியாக அல்லது வட்டார திட்ட செயலாக்க அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.தகுதியான நபர்கள், எழுத்து மற்றும் நேர்முக தேர்வின் வழியாக தேர்வு செய்யப்படுகின்றனர். பணி குறித்த விபரங்களை அறிந்துகொள்ள, வட்டார திட்ட செயலாக்க அலகு, மாவட்ட திட்ட செயலாக்க அலகு அலுவலகத்தில் அறிந்துகொள்ளலாம்.இவ்வாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X