சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரவில் பொழிந்த கனமழை: ஓடைகளில் வெள்ளப்பெருக்கு

Added : ஜன 08, 2021
Share
Advertisement
வடகிழக்கு பருவமழை சீசனில், உடுமலை, பொள்ளாச்சி, வால்பாறை சுற்றுப்பகுதிகளில், இரவு முழுவதும் கனமழை பெய்தது.அமராவதி அணை நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டது. பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திலும், ஐந்து சுற்றுகள் தண்ணீர் வழங்கப்பட்டது; குளம் உட்பட நீர்நிலைகளும், நிரம்பியது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, உடுமலை சுற்றுப்பகுதிகளில், கனமழை பெய்தது.மழையால், ஓடைகளில்,
 இரவில் பொழிந்த கனமழை: ஓடைகளில் வெள்ளப்பெருக்கு

வடகிழக்கு பருவமழை சீசனில், உடுமலை, பொள்ளாச்சி, வால்பாறை சுற்றுப்பகுதிகளில், இரவு முழுவதும் கனமழை பெய்தது.அமராவதி அணை நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டது. பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திலும், ஐந்து சுற்றுகள் தண்ணீர் வழங்கப்பட்டது; குளம் உட்பட நீர்நிலைகளும், நிரம்பியது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, உடுமலை சுற்றுப்பகுதிகளில், கனமழை பெய்தது.மழையால், ஓடைகளில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடிமங்கலம், பெரியபட்டி சுற்றுப்பகுதியில் பெய்த மழையால், உப்பாறு ஓடையில், அதிகளவு தண்ணீர் சென்றது.* வால்பாறையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 78.60 அடியாக இருந்தது. பரம்பிக் குளம் அணையின் நீர்மட்டம், 66.20 அடியாக இருந்தது.* பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம் சுற்றுப்பகுதில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழையளவு விபரம் (மில்லி மீட்டரில்):சோலையாறு - 17, வால்பாறை - 20, மேல்நீராறு - 42, கீழ்நீராறு - 10, பரம்பிக்குளம் - 8, ஆழியாறு - 11, காடம்பாறை - 15, மேல்ஆழியாறு - 6, நவமலை - 8, பெருவாரிப்பள்ளம் - 3, மணக்கடவு - 35, வேட்டைக்காரன்புதுார் - 15, பொள்ளாச்சி - 44, திருமூர்த்தி அணை - 50, நல்லாறு - 10, கள்ளிப்பாளையம் - 42, அமராவதி அணை - 8, உடுமலை நகரம் - 50, என்ற அளவில் மழை பெய்தது. -- நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X