நகரில் மழைநீர் வடிகால்கள் ஆக்கிரமிப்பால் நெடுஞ்சாலையில் சிக்கல்!கட்டமைப்பை மேம்படுத்தாமல் கடும் அவதி

Added : ஜன 08, 2021
Share
Advertisement
உடுமலை:நகரில், வடிகால் உட்பட கட்டமைப்பு வசதிகளை, மேம்படுத்தாமல் இருப்பதால், மழைக்காலங்களில், முக்கிய ரோடுகளில், தண்ணீர் தேங்கி, போக்குவரத்து ஸ்தம்பிப்பது தொடர்கதையாகி, உடுமலை மக்கள் அதிருப்தியில், உள்ளனர்.உடுமலை நகராட்சி, 7.41 சதுர கி.மீ., பரப்பில் அமைந்துள்ளது. நகர எல்லையில், ராஜவாய்க்கால் பள்ளம், தங்கம்மாள் ஓடை, கழுத்தறுத்தான் பள்ளம் என, சுற்றிலும், மழை நீர் ஓடைகள்
  நகரில் மழைநீர் வடிகால்கள் ஆக்கிரமிப்பால் நெடுஞ்சாலையில் சிக்கல்!கட்டமைப்பை மேம்படுத்தாமல் கடும் அவதி

உடுமலை:நகரில், வடிகால் உட்பட கட்டமைப்பு வசதிகளை, மேம்படுத்தாமல் இருப்பதால், மழைக்காலங்களில், முக்கிய ரோடுகளில், தண்ணீர் தேங்கி, போக்குவரத்து ஸ்தம்பிப்பது தொடர்கதையாகி, உடுமலை மக்கள் அதிருப்தியில், உள்ளனர்.உடுமலை நகராட்சி, 7.41 சதுர கி.மீ., பரப்பில் அமைந்துள்ளது. நகர எல்லையில், ராஜவாய்க்கால் பள்ளம், தங்கம்மாள் ஓடை, கழுத்தறுத்தான் பள்ளம் என, சுற்றிலும், மழை நீர் ஓடைகள் அமைந்துள்ளன.வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில், நகர எல்லையிலுள்ள மழை நீர் ஓடைகளில், அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும்.நகர குடியிருப்புகளில் இருந்து வெளியேறும், மழை நீரும், இந்த ஓடைகளில் இணையும் வகையில், முன்பு, வடிகால்கள் இருந்தன.இதனால், மழை நீர் நகரின் முக்கிய ரோடுகளில், தேங்குவதும், வெள்ளமாக செல்வது ஆகிய பிரச்னைகள் இல்லாமல், இருந்தது.நகர வளர்ச்சியின் போது, கழுத்தறுத்தான் பள்ளம் உட்பட ஓடைகளின் நீர் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டது; வடிகால்களும், முறையாக பராமரிக்கப்படாமல், மறைந்தது.சிறிய மழைக்கும் சிக்கல்மழை நீர் வடிகால் ஆக்கிரமிப்பு மற்றும் அழிக்கப்பட்டதால், குறைந்தளவு மழைப்பொழிவுக்கும், நகரின் முக்கிய ரோடுகளில், தண்ணீர் தேங்குவது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக, பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரை தேசிய நெடுஞ்சாலை, பள்ளமாக மாறி விடுகிறது.இதே போல், தளி ரோடு சிக்னலில் இருந்து மாரியம்மன் கோவில் வரையும், சிறிய இடைவெளிக்கு, பிறகு, தீயணைப்பு மீட்பு நிலையம் வரை, மழை நீர் வெளியேற வழியில்லை.குறிப்பாக, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், சத்திரம் வீதி, வ.உ.சி., வீதி உட்பட பகுதிகளின் சாக்கடை கால்வாய் அடைபட்டு, கழிவு நீர் முழுவதும், வெள்ளமாக தேசிய நெடுஞ்சாலையில் செல்கிறது.முக்கிய ரோட்டில் கழிவு நீரும், மழை நீரும் பல அடிக்கு செல்வதால், வாகனங்கள் அப்பகுதியை கடக்க சிரமப்பட வேண்டியுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை பரிதாபமாகி விடுகிறது.நேற்று முன்தினம் இரவு நகரில், பெய்த மழையால், முக்கிய ரோடுகளில், வாகன போக்குவரத்து தடைபடும் அளவுக்கு, கழிவு நீரும், மழை நீரும் வெள்ளமாக சென்றது.அரசு அலுவலகங்கள் வரிசையாக அமைந்துள்ள, கச்சேரி வீதியிலும், மழை நீர் வெளியேற வழியில்லாமல், அலுவலகங்களை சூழ்ந்து நிற்பது தொடர்கதையாக உள்ளது.சில ஆண்டுகளுக்கு முன், நகராட்சி சார்பில், மழை நீர் வடிகால்களை மீட்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.அதன்படி, தங்கம்மாள் ஓடை கரையிலுள்ள, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன; கழுத்தறுத்தான் பள்ளம் குறிப்பிட்ட துாரம் துார்வாரப்பட்டது. ஆனால், மழை நீர் வடிகால்களை முழுமையாக மீட்கவும், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, வடிகால் கட்டமைப்பை ஏற்படுத்தவும், தொடர் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதே நிலை தொடர்ந்தால், பருவமழை காலத்தில், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கும் அபாயம் உள்ளது. கேரளா, பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு உடுமலை நகரம்வழியாக செல்ல முடியாத நிலை உருவாகும்.எனவே, நகராட்சி, தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறையினர், வருவாய்த்துறையினர் ஒருங்கிணைந்து, வடிகால் ஆக்கிரமிப்பை அகற்றவும், மழை நீர் முறையாக வடிந்து செல்வதற்கான கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X