பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு வார்த்தை ஒலிப்பு பயிற்சி: கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் திட்டம்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
உடுமலை;அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர்களுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், 'ஜாலி போனிக்ஸ்' என்ற தலைப்பில், வார்த்தைகள் ஒலிப்பு குறித்து, பயிற்சி பெட்டகம், 2018 - 19ம் கல்வியாண்டில் தயாரிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், பயிற்சி வழங்க, கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயற்சி நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு தடுப்பு

உடுமலை;அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர்களுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், 'ஜாலி போனிக்ஸ்' என்ற தலைப்பில், வார்த்தைகள் ஒலிப்பு குறித்து, பயிற்சி பெட்டகம், 2018 - 19ம் கல்வியாண்டில் தயாரிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், பயிற்சி வழங்க, கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயற்சி நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி, காணொளி வாயிலாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்படி, வட்டார அளவில், அனைத்து ஆசிரியர்களுக்கும், ஜன.,18ம் தேதி முதல், இப்பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இணையவழியாக நடத்தப்படும் இப்பயிற்சியில், அனைத்து ஆசிரியர்களும் தவறாமல் பங்கேற்க, தலைமையாசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். மற்ற பயிற்சிகள் பாதிக்கப்படாத வகையில், ஜன., 18ம் தேதி முதல், பிப்., 28ம் தேதிக்குள் இது நிறைவு பெறும் வகையில் அட்டவணை தயார் செய்து, வட்டார அளவில் அளிக்க வேண்டும்.மேலும், இணைய வசதி இல்லாத ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்கும் வகையில், வட்டார வள மையத்தில், நேரடியாக சமூக இடைவெளியுடன் பங்கேற்கவும், அவர்களின் வருகையை உறுதி செய்து அறிக்கை அனுப்பவும், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.மாவட்ட அளவிலான பயிற்சிக்கு பின்னர், வட்டார அளவிலான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என, திருப்பூர் மாவட்டத்தில், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X