பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் நிரம்பிய கிராம நீராதாரங்கள்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:கிணத்துக்கடவு, நெகமம் பகுதியில், கடந்த இரு நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்கிறது. மழையால், நீர் பெருக்கெடுத்து தோப்புகள், வயல்கள், தாழ்வான பகுதியில் உள்ள விளை நிலங்களில் தேங்கியது.நெகமம் அருகே, ஆண்டிபாளையம், சேரிபாளையம், கப்பினிபாளையம் சுற்றுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு துவங்கிய மழை, தொடர்ந்து ஐந்து மணி நேரம் பெய்தது. மழையால்,

பொள்ளாச்சி:கிணத்துக்கடவு, நெகமம் பகுதியில், கடந்த இரு நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்கிறது. மழையால், நீர் பெருக்கெடுத்து தோப்புகள், வயல்கள், தாழ்வான பகுதியில் உள்ள விளை நிலங்களில் தேங்கியது.நெகமம் அருகே, ஆண்டிபாளையம், சேரிபாளையம், கப்பினிபாளையம் சுற்றுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு துவங்கிய மழை, தொடர்ந்து ஐந்து மணி நேரம் பெய்தது. மழையால், கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து, இப்பகுதியில் அமைந்துள்ள, ஐந்து குட்டைகள் நிரம்பின. அதிகப்படியான நீர் தடுப்பணைகளை கடந்து, கப்பளாங்கரையில் உள்ள குட்டையை அடைந்தது. கடந்த, எட்டு ஆண்டுகளுக்கு பின், குட்டைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.இதனால், சுற்றுப்பகுதி பாசன கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது, என, விவசாயிகள் தெரிவித்தனர். அதேபோல, புரவிபாளையம் பகுதியில் உள்ள தேவம்பாடிவலசு குளத்துக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X