உடுமலை:திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், குரூப் - 'பி', 'சி' போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு, 21ல் துவங்குகிறது.அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், தற்போது, வருமானவரித்துறை ஆய்வாளர், சப்-இன்ஸ்பெக்டர், கோட்ட கணக்குப்பதிவாளர், இளம் புள்ளியியல் அலுவலர் உள்ளிட்ட, 6,506 பணியிடங்களுக்கு, குருப்- பி, குரூப் -சி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.இம்மாதம், 31ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள், வயது வரம்பு தளர்வுகளுடன் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான விபரங்களுக்கு, https://ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் 21ம் தேதி துவங்குகிறது. பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர், 0421 - 2971152 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE