போட்டித்தேர்வு பயிற்சி: வரும் 21ல் துவங்குகிறது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போட்டித்தேர்வு பயிற்சி: வரும் 21ல் துவங்குகிறது

Added : ஜன 08, 2021
Share
உடுமலை:திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், குரூப் - 'பி', 'சி' போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு, 21ல் துவங்குகிறது.அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், தற்போது, வருமானவரித்துறை ஆய்வாளர், சப்-இன்ஸ்பெக்டர், கோட்ட கணக்குப்பதிவாளர், இளம் புள்ளியியல் அலுவலர் உள்ளிட்ட, 6,506 பணியிடங்களுக்கு, குருப்- பி, குரூப் -சி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.இம்மாதம்,

உடுமலை:திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், குரூப் - 'பி', 'சி' போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு, 21ல் துவங்குகிறது.அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், தற்போது, வருமானவரித்துறை ஆய்வாளர், சப்-இன்ஸ்பெக்டர், கோட்ட கணக்குப்பதிவாளர், இளம் புள்ளியியல் அலுவலர் உள்ளிட்ட, 6,506 பணியிடங்களுக்கு, குருப்- பி, குரூப் -சி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.இம்மாதம், 31ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள், வயது வரம்பு தளர்வுகளுடன் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான விபரங்களுக்கு, https://ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் 21ம் தேதி துவங்குகிறது. பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர், 0421 - 2971152 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X