சூலூர்;சுல்தான்பேட்டை பகுதியில் பல ஆண்டுகளுக்கு பிறகு பெய்த கனமழையால், ஐந்து வீடுகள் இடிந்து விழுந்தன.நேற்று முன்தினம் இரவு சூலூர், சுல்தான்பேட்டை பகுதிகளில், இரவு 9:00 மணிக்கு மெதுவாக துவங்கிய மழை நேரம் செல்ல கனமழையாக மாறியது. நள்ளிரவு வரை மழை வெளுத்து வாங்கியது. ரோடுகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது.சூலூர் வட்டார பகுதிகளில் இருகூரிலும், சுல்தான்பேட்டை வட்டாரத்தில் வாரப்பட்டி மற்றும் ஜே.கிருஷ்ணாபுரத்திலும் மற்ற இடங்களை காட்டிலும் கனமழை பெய்தது. ஆச்சான் குளத்தின் நீர் வழித்தடமான அத்தப்பகவுண்டன்புதுார் வாய்க்காலில் மழை நீர் பல ஆண்டுகளுக்கு பிறகு பெருக்கெடுத்து ஓடியது. சுல்தான்பேட்டை பகுதியில், வறண்டு கிடந்த நீர் நிலைகள் நிரம்பி வழிந்துள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சூலூர் வட்டாரத்தில், 37 மி.மீ., சுல்தான்பேட்டை வட்டாரத்தில், மிக அதிகமாக, 173 மி.மீ., மழையளவு பதிவாகி இருந்தது.வீடுகள் இடிந்தன:ஜே.கிருஷ்ணாபுரத்தில் பெய்த கனமழையால், கமலா, சுப்ரமணியம், சாமிநாதன், பொன்னுச்சாமி, சரசாள் ஆகியோரது வீடுகள் சேதமடைந்தன. சூலூர் தாசில்தார் மீனாகுமாரி உத்தரவின் பேரில், அலுவலர்கள் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை மற்றும் அரிசி, பருப்பு, மற்றும் வேட்டி, சேலைகள் வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE