சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி, 2 குழந்தைகள் கொலை: துாக்கில் தொங்கிய தொழிலாளி

Added : ஜன 08, 2021
Share
Advertisement
குன்னுார்;குன்னுார் கொலக்கம்பை எஸ்டேட்டில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி, அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகள் மர்மமான முறையில், இறந்த நிலையில் காணப்பட்டனர்.நீலகிரி மாவட்டம், குன்னுார் கொலக்கம்பை அருகே, தனியார் தேயிலை தோட்டத்தில், ஜார்கண்ட் மாநில தொழிலாளி அசோக் பகத், 27, வேலை செய்து வந்தார். இவர்- மனைவி சுமதி குமாரி, 24, மகன் அபய், 8, மகள் ரேஷ்மா 4, ஆகியோருடன், எஸ்டேட்
 மனைவி, 2 குழந்தைகள் கொலை: துாக்கில் தொங்கிய தொழிலாளி

குன்னுார்;குன்னுார் கொலக்கம்பை எஸ்டேட்டில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி, அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகள் மர்மமான முறையில், இறந்த நிலையில் காணப்பட்டனர்.நீலகிரி மாவட்டம், குன்னுார் கொலக்கம்பை அருகே, தனியார் தேயிலை தோட்டத்தில், ஜார்கண்ட் மாநில தொழிலாளி அசோக் பகத், 27, வேலை செய்து வந்தார். இவர்- மனைவி சுமதி குமாரி, 24, மகன் அபய், 8, மகள் ரேஷ்மா 4, ஆகியோருடன், எஸ்டேட் குடியிருப்பில் வசித்து வந்தார்.நேற்று காலை, வீட்டின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாத நிலையில், அருகில் இருந்த தொழிலாளர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வீட்டை போலீசார் திறந்து பார்த்தபோது, சுமதி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையிலும், ரேஷ்மா தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடப்பதும் தெரியவந்தது. மகன் அபய் தலையில் தாக்கி, கொலை செய்யப்பட்டு கிடந்தார். மற்றொரு இடத்தில், அசோக் பகத் துாக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. அங்கு கிடந்த ஒரு காகிதத்தில் அப்பகுதிகளை சேர்ந்த, ஒன்பது நபர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. அதை போலீசார் கைப்பற்றினர். அதன் அடிப்படையில், மனைவி குழந்தைகளை கொன்று, தொழிலாளி துாக் கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. நான்கு உடல்களும் குன்னுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.குன்னுார் டி.எஸ்.பி., சுரேஷ் கூறுகையில், ''குடும்ப பிரச்னை காரணமாக சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது. இப்பகுதியில் ஏற்கனவே, ஒரு சிறுமி காணாமல் போன சம்பவம் நடந்துள்ளது. இதனால், தீவிர விசாரணை நடந்து வருகிறது. முழு விபரம், பின்னர் தெரிவிக்கப்படும்,''என்றார்.மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு நடத்திய சோதனையில், இப்பகுதியில் உள்ள வீடுகள் மட்டுமின்றி, தேயிலை எஸ்டேட் உள்ளிட்ட பிற இடங்களிலும் நாய் சென்று வந்தது. இதனால், பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.மாயமான சிறுமிஇப்பகுதியில், டிச., 21ம் தேதி, ஜார்கண்ட் தொழிலாளி இன்னொருவரின், எட்டு வயது மகள் காணாமல் போனார். 17 நாட்கள் ஆகியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தில், அசோக பகத் மீது சந்தேகமடைந்த சிலர், இவரை, கடந்த, மூன்று நாட்களாக சந்தேகத்தின் அடிப்படையில், தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இவர் இந்த விபரீத முடிவு எடுத்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X