விருத்தாசலம்; விருத்தாசலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளரிடம் வாழ்த்து பெற்றனர்.கடலுார் மேற்கு மாவட்டம், விருத்தாசலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., இளைஞரணி அமைப்பாளராக தர்ம மணிவேல், துணை அமைப்பாளர்களாக திருஞானசெல்வம், ராஜவேல், சண்முகம், வசந்தகுமார், சுபாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.புதிய நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி தலைமையில் மேற்கு மாவட்டச் செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ.,வை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இதேபோன்று, தெற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன் தலைமையில் இளைஞரணி அமைப்பாளர் நடராஜன், துணை அமைப்பாளர்கள் பாலகிருஷ்ணன், தே.கோபுராபுரம் இளையராஜா, பாலு, வெங்கடேசன், பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்து பெற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE