பொது செய்தி

தமிழ்நாடு

மீன் குஞ்சுகள் வளர்க்க 41 ஊரக குளங்கள் தேர்வு

Added : ஜன 08, 2021
Share
Advertisement
கடலுார்; கடலுார் மாவட்டத்தில், மீன் குஞ்சுகள் வளர்க்க 41 ஊரக வளர்ச்சி குளங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தில், கடலுார் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊரக குளங்களில் 25 ஹெக்டர் பரப்பளவில் 1.25 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதன்படி இத்திட்டத்தை செயல்படுத்த

கடலுார்; கடலுார் மாவட்டத்தில், மீன் குஞ்சுகள் வளர்க்க 41 ஊரக வளர்ச்சி குளங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தில், கடலுார் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊரக குளங்களில் 25 ஹெக்டர் பரப்பளவில் 1.25 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதன்படி இத்திட்டத்தை செயல்படுத்த மாவட்ட திட்ட செயலாக்க குழுக் கூட்டம், கலெக்டர் சந்திரசேகர சகாமுரி தலைமையில், அவரது அலுவலக கூட்டரங்கில் நடந்தது.கூ ட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களும் பயன்பெறும் வகையில் 41 ஊரக வளர்ச்சி குளங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டத்தினை ஒருவார காலத்திற்குள் தொடங்க அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.மீன் வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், உதவி இயக்குநர்கள் (ஊராட்சிகள்) கண்ணன், சின்னகுப்பன், மீன்வள கூட்டுறவு சங்கத் தலைவர் பச்சையப்பன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X