புவனகிரி; புவனகிரியில் இந்திய அஞ்சல்துறை சார்பில் ஆதார் அட்டைக்கான சிறப்பு முகாம் துவங்கியது.ஆதார் அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை பெற வசதியாக நேற்று, புவனகிரி அஞ்சல் நிலையத்தின் சார்பில், கோட்ட கண்காணிப்பாளர் முருகன் உத்தரவின் பேரில் ஆதார் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் துவங்கியது.முகாமை, புவனகிரி அஞ்சல் நிலைய அலுவலர் பாலச்சந்திரன் துவக்கி வைத்தார். முகாம் நாளை 9ம் தேதி வரை நடக்கிறது.ஆதார் அட்டை இல்லாதவர்கள், பெயர் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தத்திற்கு ரூ.50 கட்டணம் செலுத்தி பயன் பெறலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE