கடலுார்; கடலுார் மாவட்டத்தில் அதிகபட்சமாக மேமாத்துாரில் 206 மி.மீ., மழை பதிவானது.மாவட்டம் முழுதும் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், வீடுகளில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 'நிவர்', 'புரெவி' புயலின் போது பெய்த மழையால் பள்ளமான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது.அந்த தண்ணீர் வடியாத நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் மீண்டும் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை 8:30 மணி வரை பெய்த மழை அளவு மி.மீ., விபரம்:மேமாத்துார் 206, வேப்பூர் 180, காட்டுமயிலுார் 172, பெலாந்துறை 158.4, ஸ்ரீமுஷ்ணம் 108.3, கலெக்டர் அலுவலகம் 85.5, புவனகிரி 78, விருத்தாசலம் 77, அண்ணாமலை நகர் 69.2, பரங்கிப்பேட்டை 66.6, குப்பநத்தம் 65.8, சேத்தியாத்தோப்பு 63, லால்பேட்டை 60.8, குடிதாங்கி 59.2, காட்டுமன்னார்கோவில் 57, சிதம்பரம் 53.6, கொத்தவாச்சேரி 53, குறிஞ்சிப்பாடி 52, லக்கூர் 47.1, கீழ்ச்செருவாய் 47, வானமாதேவி 47, கடலுார் 41.6, வடக்குத்து 36.5, தொழுதுார் 27, பண்ருட்டி 17 மி.மீ., மழை பதிவானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE