ஸ்ரீமுஷ்ணம்; அரியலுார் மாவட்டம் சிலுவைச்சேரியில் ஏரி உடைந்ததால் வெளியேறிய வெள்ள நீர் கடலுார் மாவட்ட வயல்களில் புகுந்து பயிர்கள் சேதமாயின.அரியலுார் மாவட்டம், சிலுவைச்சேரியில் உள்ள ஏரி நேற்று இரவு உடைப்பு ஏற்பட்டது. ஏரியில் இருந்து வெளியேறிய வெள்ள நீர் கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சின்னாத்துக்குறிச்சி ஓடை வழியாக சென்றது.இதனால் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை வரை ஸ்ரீமுஷ்ணம் - விருத்தாசலம் சாலையில் முழங்காலுக்கு மேல் வெள்ள நீர் ஓடியதால் போக்குவரத்து தடைபட்டது.மேலும், இந்த வெள்ளநீர் பெலாந்துறை வாய்க்காலில் கலந்து வெளியே செல்லும்.ஆனால், சில தினங்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்ட சாத்தமங்கலம் பகுதியில் உள்ள வாய்க்கால் சீரமைக்கப்படாததால் வாய்க்கால் உடைப்பு பெரிதானது.இதன் காரணமாக விருத்தாசலம் அடுத்த சின்னாத்துக்குறிச்சி பகுதியில் பயிரிடப்பட்டிருந்த முருங்கை, வேர்க்கடலை பயிர்களை மணல் சூழ்ந்ததால் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தது.மேலும் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த மதகளிர்மாணிக்கம் பகுதியில் உள்ள நெற்பயிர்களும் சேதமானது. இதனால், விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE