பொது செய்தி

இந்தியா

அயோத்தி ராமர் கோவில்: ஆர்.எஸ்.எஸ்.,புகழாரம்

Added : ஜன 08, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
காந்திநகர்: 'நாட்டின் சுயமரியாதை மற்றும் கவுரவத்தின் சின்னமாக, அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவில் விளங்கும்' என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தெரிவித்துள்ளது.திருப்புமுனை:குஜராத்தில், உள்ள காந்திநகரில், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அதன் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்ற, மூன்று நாள் கூட்டம் நடந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்,
RSS, Ayodhya, Ram Temple

காந்திநகர்: 'நாட்டின் சுயமரியாதை மற்றும் கவுரவத்தின் சின்னமாக, அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவில் விளங்கும்' என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தெரிவித்துள்ளது.


திருப்புமுனை:


குஜராத்தில், உள்ள காந்திநகரில், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அதன் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்ற, மூன்று நாள் கூட்டம் நடந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உட்பட, பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், தீர்மானங்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ்., இணை பொதுச் செயலர் கிருஷ்ண கோபால் கூறியதாவது: அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில், நாட்டின் சுயமரியாதை மற்றும் கவுரவத்தின் சின்னமாக விளங்கும். அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக நடந்த அடிக்கல் நாட்டு விழா, நாட்டின் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

ராமர் கோவில் கட்டும் பணியில், நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என, ஆர்.எஸ்.எஸ்., விரும்புகிறது. இதற்காக, ஐந்து லட்சம் கிராமங்களில், 10 கோடிக்கும் அதிகமான குடும்பங்களை தொடர்பு கொண்டு, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அதன் பல்வேறு அமைப்பு கள், நிதி வசூலிக்கும். தனிப்பட்ட நபரிடம், 10 ரூபாயும், ஒரு குடும்பத்திடம், 100 ரூபாயும் வசூலிக்க முடிவு செய்து உள்ளோம்.


latest tamil newsமொழி, ஜாதி, பிறப்பு ஆகியவற்றால், ஹிந்துக்களிடம் ஏற்பட்டுள்ள வேற்றுமைகளை போக்கி, ஒற்றுமையை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 'ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று; அனைவரும் சரிசமமானவர்கள்' என, ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள், மக்களிடம் பிரசாரம் செய்வர்.


சுற்றுச்சூழல் பாதுகாப்பு:


கூட்டுக் குடும்பமாக வாழும், ஹிந்து கலாசாரத்தின் பெருமையை, மக்களிடம் எடுத்துக் கூறவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. ஏனெனில், நாட்டில், கூட்டுக் குடும்ப வாழ்க்கை மறைந்து வருகிறது. குடும்பங்கள் உடைவது, சமூகத்துக்கு நல்லதல்ல. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மரக்கன்றுகள் நடுதல், நீர்நிலைகளை பாதுகாத்தல் உட்பட, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அதன் பல்வேறு அமைப்புகள் ஈடுபடும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
08-ஜன-202116:03:48 IST Report Abuse
r.sundaram சுய மரியாதையும் கவுரவமும் பூரணம் அடைய வேண்டுமானால் காசியும், மதுராவும் மீட்கப்பட வேண்டும்.
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
08-ஜன-202118:38:55 IST Report Abuse
Chowkidar NandaIndiaஆம். மறுக்க முடியாத மறக்க முடியாத உண்மை....
Rate this:
Cancel
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
08-ஜன-202113:41:31 IST Report Abuse
ShivRam ShivShyam வயதானவரும் சென்று தரிசனம் செய்ய லிப்ட், வீல் சேர், வீல் சேர் செல்ல சமதள வழி படி இருக்கும் இடங்களில் ஆங்காங்கே பெஞ்சுகள் நிழற்குடையுடன் அமைக்கவும்
Rate this:
Cancel
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
08-ஜன-202112:59:42 IST Report Abuse
Chowkidar NandaIndia ஜெய் ஸ்ரீ ராம். உலகம் முழுவதும் அமைதி பரவட்டும். ஸ்ரீ ராமரின் நல்லாசி அனைவருக்கும் கிடைக்கட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X