பொது செய்தி

தமிழ்நாடு

பாசன வாய்க்காலில் உடைப்பு

Added : ஜன 08, 2021
Share
Advertisement
சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே தியாகராஜபுரம் கிராமத்தில் ஏரி பாசன வாய்க்கால்உடைந்து ஏரியிலிருந்து வெளியேறும் உபரி வயல்களில் புகுந்ததால் நெற் பயிர்கள் சேதமடைந்தன.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் கிராமத்தில் ஏரி பாசனம் முலம் 3 போக சாகுபடி செய்து வந்தனர்.கடந்த ஐப்பசி மாதம்சம்பா சாகுபடி செய்த நெல் பயிர்கள் தற்போதுநன்கு

சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே தியாகராஜபுரம் கிராமத்தில் ஏரி பாசன வாய்க்கால்உடைந்து ஏரியிலிருந்து வெளியேறும் உபரி வயல்களில் புகுந்ததால் நெற் பயிர்கள் சேதமடைந்தன.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் கிராமத்தில் ஏரி பாசனம் முலம் 3 போக சாகுபடி செய்து வந்தனர்.கடந்த ஐப்பசி மாதம்சம்பா சாகுபடி செய்த நெல் பயிர்கள் தற்போதுநன்கு வளர்ந்துஅறுவடைக்கு தயார் நிலையில் இருந்து வந்தது.இந் நிலையில் நேற்று முன் தினம் காலை முதல் நேற்றுஅதிகாலை வரை இடைவிடாது பெய்த தொடர் மழை காரணமாக ஆற்றில் அதிக அளவில்வெள்ளப் பெருக்குஏற்பட்டது.ஆற்று நீர் வாய்க்கால் முலம் ஏரிக்குசென்றது. ஏற்கனவே நிரம்பியிருந்த தியாகராஜபுரம் கிராம ஏரி தொடர்மழை காரணமாக ஆற்று வெள்ள நீர் ஏரிக்கு வந்ததால் , உபரி நீர் கோடி வாயக்கால் வழியாகவெளியேறியது.கோடி வாயக்காலில் அதிக அளவில்தண்ணீர் சென்றதால் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளநீர் அருகிலிருந்த நெல் வயல்களில்பாய்ந்தது.இதனால் அறுவடைக்குதயார்நிலையில்இருந்த பல ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் மழைநீரில் அழுகி சேதமடைந்தன.இதனால் தியாகராஜபுரம் கிராம விவசாயிகள்கவலையடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X