சின்னசேலம்; சின்னசேலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள், மழை யால் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.சின்னசேலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான கனியாமூர், நயினார்பாளையம், மேலுார், பெரியசிறுவத்துார், அம்மையகரம் போன்ற பகுதிகளில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்படும்.அதேபோல் இந்தாண்டு சம்பா பருவத்தில் பொன்னி, பொன்மணி, பி.பி.டி., ஆந்திரா பொன்னி போன்ற நெல் ரகங்கள் பயிரிடப்பட்டன. அவை பெரும்பாலும் தற்போது நெற்கதிர் முற்றிவரும் நிலையில் உள்ளது.இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் மழையால், பெரும் பாலான வயல்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன.இது குறித்து விவசாயிகள் கூறுகையில் 'கதிர்கள் வெளிவராத நெல் பயிர்களுக்கு, தற்போது பெய்து வரும் மழை சரியான ஊட்டச்சத்தாக அமையும்.அதே நேரத்தில், மழை நீடித்தால் வயலில் சாய்ந்துள்ள நெல் பயிர்கள் அங்கேயே முளைத்து கடுமையான பாதிப்பு ஏற்படும்' என கவலை தெரிவிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE