பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா

Added : ஜன 08, 2021
Share
Advertisement
வானுார் - வானுார் ஒன்றிய அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.வானுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், நடந்த விழாவிற்கு திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி வரவேற்றார்.அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் சக்கரபாணி எம்.எல்.ஏ., பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிள்களை வழங்கினார். விழாவில் தி.கூட்ரோடு, வானுார்,

வானுார் - வானுார் ஒன்றிய அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.வானுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், நடந்த விழாவிற்கு திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி வரவேற்றார்.அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் சக்கரபாணி எம்.எல்.ஏ., பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிள்களை வழங்கினார். விழாவில் தி.கூட்ரோடு, வானுார், கரசானுார், கோட்டக்குப்பம், எறையூர், புளிச்சப்பள்ளம் ஆகிய ஆறு பள்ளிகளை சேர்ந்த 464 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஜெயராமன், அலெக்சாண்டர், கருணாநிதி, ஆனந்தன், முருகன், மணிமேகலை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பெருமாள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X