அவலுார்பேட்டை - அவலுார்பேட்டை ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறுகிறது.அவலுார்பேட்டையில் பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் 250 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பிலான ஏரி உள்ளது. தொடர் மழையால் இந்த ஏரி, சில தினங்களுக்கு முன் நிரம்பியது. இந்நிலையில், கடந்த இரு தினங்களாக பெய்த மழையினால், ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது.இதனால் ஏரி நிரம்பி, நேற்று முன்தினம் இரவிலிருந்து உபரி நீர் வெளியே றியது. கடந்த 10 ஆண்டு களுக்கு பிறகு ஏரி நிரம்பியதால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஏரியிலுள்ள முள்வேலி உள்ளிட்ட மரங்கள், புதர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஏரி வரத்து வாய்க்கால்களை பொதுப்பணி துறை அதிகாரிகள் முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE