கோபாலபுரம் மக்கள் அவதி

Added : ஜன 08, 2021
Share
Advertisement
திண்டிவனம்; திண்டிவனம் அருகே கோபாலபுரம் குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.திண்டிவனம் அருகே மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மானுார் பஞ்சாயத்தை சேர்ந்த கோபாலபுரம் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.திண்டிவனம் நகராட்சியையொட்டிய பகுதியான கோபாலபுரம் 3வது தெருவில், மழை நீர் தேங்கி குளம் போல்

திண்டிவனம்; திண்டிவனம் அருகே கோபாலபுரம் குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.திண்டிவனம் அருகே மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மானுார் பஞ்சாயத்தை சேர்ந்த கோபாலபுரம் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.திண்டிவனம் நகராட்சியையொட்டிய பகுதியான கோபாலபுரம் 3வது தெருவில், மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மேல்பகுதியிலிருந்து வெளியேறும் மழை நீர் கோபாலபுரம் 3வது தெருவில் அதிக அளவில் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரை வெளியேற்றுமாறு, மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே, குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்ற அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X