திண்டிவனம் கிடங்கல் ஏரி உபரி நீர் வௌியேற்றம்: பொதுமக்கள் அவதி

Added : ஜன 08, 2021
Share
Advertisement
திண்டிவனம் - திண்டிவனம் கிடங்கல் ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறுவதால், பஸ் நிலையத்திற்கு வாகனங்கள் வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.திண்டிவனம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கிடங்கல் பகுதியில் உள்ள ஏரி நிரம்பியது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால், சுற்றுப்புற பகுதியிலிருந்து ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது.அதனால், நேற்று அதிகாலையிலிருந்து, கிடங்கல்

திண்டிவனம் - திண்டிவனம் கிடங்கல் ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறுவதால், பஸ் நிலையத்திற்கு வாகனங்கள் வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.திண்டிவனம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கிடங்கல் பகுதியில் உள்ள ஏரி நிரம்பியது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால், சுற்றுப்புற பகுதியிலிருந்து ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது.அதனால், நேற்று அதிகாலையிலிருந்து, கிடங்கல் ஏரியின் உபரி நீர் கிடங்கல் ஓடை வழியாக வெளியேறி வருகிறது.திண்டிவனம் நகராட்சி பஸ் நிலையத்தையொட்டி உள்ள ஓடை வழியாக வெளியேறும் உபரி நீர், ரயில்வே தரைப்பாலம் வழியாக வெள்ளம் போல் ஓடுகின்றது. இதன் காரணமாக, நகராட்சி பஸ் நிலையத்திற்கு ரயில்வே தரைப்பாலம் வழியாக பஸ் உள்ளிட்ட வாகனங்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மேலும், கிடங்கல் ஓடையில் உள்ள பாதையை கடந்து ஏரி உபரி நீர் வெள்ளமாக பாய்வதால் அப்பகுதி மக்கள் பஸ் நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிக்கு வருவதில் தடை ஏற்பட்டுள்ளது. மக்கள் மேம்பாலத்தை சுற்றிக்கொண்டு நகரப்பகுதிக்கு வரவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X