திண்டிவனம் - சர்வதேச சிலம்பம் போட்டியில் ஸ்ரீதரம்சந்த் ஜெயின் பள்ளி மாணவர்கள் 6 பதக்கங்களை பெற்றனர்.சர்வதேச சிலம்பம் சம்மேளனம் சார்பில் முதல் 'இணையவழி சர்வதேச சிலம்ப போட்டி - 2020' நடந்தது. இதில் திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீதரம்சந்த் ஜெயின் பள்ளி மாணவர்கள், உடற்பயிற்சி ஆசிரியர் மகேஸ்வரி மேற்பார்வையில் கலந்து கொண்டனர்.அவர்களில், மாணவர்கள் அக்தர், பர்வேஷ், கவுசிகா ஆகியோர் தங்கப் பதக்கங்களையும், ராஜாகுமார், ராகுல் நேத்ரா ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும், ஜெர்சன் சாமுவேல் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் பப்ளாசா, செயலாளர் ஜின்ராஜ், பொருளாளர் நவீன்குமார், நிர்வாக இயக்குனர் அனுராக், பள்ளி முதல்வர் ஜெகன் ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE