விழுப்புரம்; பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி, விழுப்புரத்தில் மறியலில் ஈடுபட்ட மக்கள் நல பணியாளர்கள் 120 பேரை போலீசார் கைது செய்தனர்.தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் சார்பில், கடந்த 2011ம் ஆண்டு பணிநீக்கம் செய்த 13,500 மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணியை தமிழக முதல்வர், உள்ளாட்சி துறை அமைச்சர் ஆகியோர் வழங்க கோரி, விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நுாதன முறையில் ரத்தம் விற்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.இதற்காக சங்க நிர்வாகிகள் காலை 10.50 மணிக்கு கைகளில் ஊசியோடு ரத்தம் எடுப்பதற்காக தயார் நிலையில் கோஷங்களை எழுப்பி, மாநில தலைவர் செல்லபாண்டியன் தலைமையில், கலெக்டர் அலுவலகம் எதிரே காலை 11.30 மணிக்கு திடீரென மறியலில் ஈடுபட்டனர்.தாலுகா போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை கைது செய்து, வாகனங்களில் ஏற்றி சென்றனர். இந்த சம்பவத்தால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE