விழுப்புரம்; விழுப்புரம் நகரில் ேஷர் ஆட்டோக்களை விதிமுறை மீறி இயக்கினால், டிரைவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என டி.எஸ்.பி., எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம் போக்குவரத்து போலீசார் சார்பில், ஆட்டோ மற்றும் ேஷர் ஆட்டோ டிரைவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, டி.எஸ்.பி., நல்லசிவம் தலைமை தாங்கினார். தாலுகா இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.இதில், டி.எஸ்.பி., நல்லசிவம் பேசியதாவது;விழுப்புரம் நகரில் ேஷர் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ேஷர் ஆட்டோக்களை நிறுத்த வேண்டும். சாலையில் செல்லும் ேஷர் ஆட்டோக்களை திடீரென நிறுத்துவதால், விபத்துக்கள் ஏற்படுகின்றது. இதனால், உயிரிழப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளது.மேலும், நகரில் இயக்கப்படும் பல ேஷர் ஆட்டோக்களில் இன்சூரன்ஸ் இல்லாமல் உள்ளது. டிரைவர்கள் சீருடை அணிந்து வாகனம் ஓட்டுவதில்லை. இன்சூரன்ஸ் கட்டவும், சீருடை அணியவும், போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கவும் பல முறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும், டிரைவர்கள் இதை கடைபிடிப்பது போன்று தெரியவில்லை. இதனால், நாளை முதல் விதிமுறை மீறி இயக்கப்படும் ேஷர் ஆட்டோக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். மேலும், டிரைவர்களின் லைசென்ஸ் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.அப்போது, மேற்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், ராஜலட்சுமி கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE