கள்ளக்குறிச்சி; ஜெம் மருத்துவமனை சார்பில் அதிக உடல் பருமனுக்கான இலவச ஆலோசனை முகாம் கள்ளக்குறிச்சியில் வரும் 10ம் தேதி நடக்கிறது. 21ம் நுாற்றாண்டில் உடல் பருமன் நோய் என்பது உலகம் முழுதும் பெரும்பான்மையாக உள்ளது. உடல்பருமன் நோய் வாழ்க்கை முறை நோய்களான சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, மூட்டுவலி, இதய நோய்கள், குறட்டை, குழந்தையின்மை, சில வகை புற்றுநோய்களுக்கும் வழிகாட்டியாக உள்ளது. தற்போது, குணப்படுத்த முடியாத உடல்பருமன் மற்றும் சர்க்கரை நோய்க்கு உடல்பருமன் அறுவை சிகிச்சை ஒரு சிறந்த சிகிச்சை முறையாக இருக்கிறது. இந்த அறுவை சிகிச்சையானது தமிழக அரசின் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உயிர் காக்கும் அறுவை சிகிச்சையாக அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உலகத்தர சிகிச்சை வழங்க புகழ் பெற்ற கோவை ஜெம் மருத்துவமனை, தற்போது சென்னையிலும் துவங்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, கள்ளக்குறிச்சியில் வரும் 10ம் தேதி காலை 9:00 மணி முதல் 1:00 மணி வரை எஸ்.ஆர் பார்க் திருமண மஹாலில் இலவச ஆலோசனை வழங்கும் முகாம் நடக்கிறது. இதில், ஜெம் மருத்துவமனையின் சிறப்பு உடல்பருமன் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரவீன் ராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆலோசனை வழங்குகின்றனர். இந்த ஆலோசனை முகாமில் கலந்து கொண்டு அதிக உடல் எடையால் குறட்டை, குழந்தையின்மை, கட்டுபாடற்ற சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களில் இருந்து விடுபட்டு, ஆரோக்கியமான வாழ்க்கையை பெற வேண்டுகிறோம். மேலும், விவரங்கள் மற்றும் முன்பதிவிற்கு 73970 33533 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE