வில்லியனுார்; அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலத்திலிருந்து வில்லியனுார் பைபாஸ் எம்.ஜி.ஆர் சிலை வரை சாலையில் சென்டர் மீடியன் அமைக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.புதுச்சேரி-விழுப்புரத்திற்கு முக்கிய வழியாக உள்ள சாலையில் அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து வில்லியனுார் பைபாஸ் எம்.ஜி.ஆர் சிலை வரை தினமும் அதிக வாகன நெரிசல் ஏற்படுகிறது.குறுகலாக உள்ள அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலத்திலும்,வில்லியனுார் பைபாஸ் சாலை எம்.ஜி.ஆர் சிலை வரை அதிகரித்துள்ள வாகன நெரிசலால் சுல்தான்பேட்டை பகுதி மக்கள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர்.பயணிகள் பஸ்கள், பள்ளி, கல்லுாரி பஸ்கள் அதிகளவில் இயக்காமல் உள்ள நிலையிலேயே வாகன நெரிசல் ஏற்படுகிறது. முழுமையாக பள்ளி மற்றும் கல்லுாரிகள் துவக்கினால் மேலும் வாகனங்கள் அதிகரித்து கடுமையான போக்குவரத்து நெரிசலால் வாகன விபத்துகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலம் அருகில் துவங்கி, வில்லியனுார் பைபாஸ் சாலை எம்.ஜி.ஆர். சிலை பகுதி வரை சாலையின் மையத்தில் சென்டர் மீடியன் அமைக்க நெடுஞ் சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE