முதல்வர், அமைச்சர்களை வீட்டுக் காவலில் வைக்க வேண்டும்: அன்பழகன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி; மாநிலத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் முதல்வர், அமைச்சர்களை கைது செய்து வீட்டுக்காவலில் வைக்க வேண்டும் என அன்பழகன் எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை :ஆட்சியில் தங்கள் பலவீனமான செயலை மூடி மறைக்க, ஆளும் காங்.,கட்சியும், கூட்டணி கட்சிகளும் இணைந்து கவர்னருக்கு எதிராக போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். முதல்வரின் பொறுப்பற்ற தன்மைக்கு இது

புதுச்சேரி; மாநிலத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் முதல்வர், அமைச்சர்களை கைது செய்து வீட்டுக்காவலில் வைக்க வேண்டும் என அன்பழகன் எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை :ஆட்சியில் தங்கள் பலவீனமான செயலை மூடி மறைக்க, ஆளும் காங்.,கட்சியும், கூட்டணி கட்சிகளும் இணைந்து கவர்னருக்கு எதிராக போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். முதல்வரின் பொறுப்பற்ற தன்மைக்கு இது உதாரணம். கொரோனாவைவிட கொடிய வைரஸ் பரவும் சூழ்நிலையில் மக்களை பற்றி கவலைப்படாமல் ஒரு மிகப்பெரிய கூட்டத்தை கூட்டி மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சராக இருப்பவரே செயல்படுவது சட்ட விரோதம்.தொடர்ந்து மத்திய அரசு அமைதியாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை. ஆளுநர் மாளிகையை சுற்றி 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு விவகாரத்தில் எல்லாரும் நாடகம் நடத்துகின்றனர்.யாரெல்லாம் தவறு செய்வார்கள் என காவல்துறைக்கும், கலெக்டருக்கும் தெரிகிறதோ அவர்களை சமூக குற்றவாளிகளாக நினைத்து முன்னெச்சரிக்கையாக கைது செய்யாமல் தடை போடுவது எந்த விதத்தில் நியாயம்.முதல்வரோ, அமைச்சர்களோ, அரசியல் கட்சி தலைவர்களோ யாராக இருந்தாலும் அவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து வீட்டு காவலில் வைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் நேரிடையாக தலையிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X