புதுச்சேரி; வி.சி., கட்சியின் புதுச்சேரி மாநில செயற்குழு கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.மாநில முதன்மை செயலாளர் தேவபொழிலன் தலைமை தாங்கினார். அமுதவன், தமிழ்மாறன், நந்தன்,அரிமாதமிழன், கார்முகில் முன்னிலை வகித்தனர். புதுச்சேரி, தமிழக தொண்டரணி முதன்மை செயலாளர் பொதினி வளவன் பங்கேற்றனர்.பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவச கல்வி திட்டத்தை அரசு ஏற்கும் என அறிவித்த முதல்வர் நாராயணசாமிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.வரும் சட்டசபை தேர்தலில் 10 தொகுதியில் போட்டியிட கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி.,இறுதி முடிவுக்கு கட்டுப்படுவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE