பொது செய்தி

இந்தியா

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோரிக்கை விளக்க வாயிற் கூட்டம்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி; ஒருங்கிணைந்த சுகாதார ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் மூன்றாவது நாளாக கோரிக்கை விளக்க வாயிற்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் அரசு பொது மருத்துவமனை, மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் கோரிக்கை விளக்க வாயிற்கூட்டம் நடத்தப்பட்டது. நேற்று அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கோரிக்கை விளக்க

புதுச்சேரி; ஒருங்கிணைந்த சுகாதார ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் மூன்றாவது நாளாக கோரிக்கை விளக்க வாயிற்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் அரசு பொது மருத்துவமனை, மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் கோரிக்கை விளக்க வாயிற்கூட்டம் நடத்தப்பட்டது. நேற்று அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கோரிக்கை விளக்க வாயிற்கூட்டம் நடந்தது. குழு அமைப்பாளர்கள் அன்புசெல்வன், கலைச்செல்வன் தலைமை தாங்கினர். அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச் செயலாளர் லட்சுமணசாமி சிறப்புரையாற்றினார். துணை அமைப்பாளர்கள் ஜானகி, துளசி பாக்கியவதி ஆகியோர் பேசினர். ராஜ்குமார், வெற்றிவேல், கணபதி, பக்தவச்சலம் உட்பட பலர் பங்கேற்றனர். தசரதன் நன்றி கூறினார். போராட்டத்தில், சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அனைத்து பிரிவுகளிலும் பணியிடங்களை மறு கட்டமைப்பு செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும். இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்த சம்பள நிலுவை, பல்வேறு படிகளை முன் தேதியிட்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X